ஹெச் 1 பி விசா தடை காலம் பிப்ரவரி 19 வரை நீட்டிப்பு

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      உலகம்
h-1b 0

நியூயார்க்,அமெரிக்காவில் பிரீமியம் நடைமுறையில் ஹெச் 1பி விசா வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் மேலும் நீட்டிக்கப்படுவதாக, அந்த நாட்டின் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில், சாதாரண முறையில் ஹெச்1பி  விசா பெற விண்ணப்பித்தவரின் விண்ணப்பம் 6 மாத காலங்களுக்குள் பரிசீலனை செய்யப்படும். ஆனால், பிரீமியம் முறையில் விண்ணப்பித்தவருக்கு 15 நாள்களுக்குள் பரிசீலிக்கப்படும்.

செலவு அதிகமாக இருந்தாலும் அமெரிக்காவிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்கள் உள்பட பலர் பிரீமியம் நடைமுறையிலேயே விசாவுக்கு விண்ணப்பித்து வந்தனர்.

இந்நிலையில் மிக அதிகமான விசா விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படாமல் தேக்கத்திலிருப்பதைக் காரணம் காட்டி, பிரீமியம் நடைமுறையில் ஹெச் 1பி விசா வழங்குவதைக் கடந்த மார்ச் மாதம், அந்நாடு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இதனால் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முதலில், இந்தத் தடை செப்டம்பர் 10 -ம் தேதி வரை விதிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்திருந்த அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் ஆணையம், தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 வரை பிரீமியம் விசா மீதான தடை தொடரும் என்று அறிவித்துள்ளது.

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Thai month festival spl - 2019 | விளம்பி வருடம் தை மாதம் பண்டிகைகளின் சிறப்பு

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து