முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மர் நாட்டில் அணை உடைந்து வெள்ளப்பெருக்கு

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

யாங்கூன், மியான்மர் நாட்டில் அணை ஒன்றில் உடைப்பு ஏற்பட்டு பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 85 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 65 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். வயல்கள், வீடுகள், சாலைகள் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

மியான்மர் நாட்டின் மத்திய மகாணத்தில் உள்ள ஸ்வார் கிரீக் பகுதியில் கட்டப்பட்டுள்ள அணை திடீரென உடைந்தது. இந்த பகுதியில் பாசனத்துக்காக கட்டப்பட்ட இந்த அணை பாராமரிப்பு இன்றி இருந்த நிலையில், அதிகமான தண்ணீர் சேர்த்து வைக்கப்பட்டதால் உடைந்தது.

இதனால் அந்த பகுதியில் உள்ள 85 கிராமங்களில் நீர் சூழ்ந்தது. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளதில் 63 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர். வீடுகளை இழந்து தவிப்பவர்களை ராணுவமும், மீட்பு குழுவினரும் மீட்டு வருகின்றனர். சாலைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

முக்கிய நகரங்களான நைபிடாவ், யாங்கூன் செல்லும் சாலை தண்ணீரில் மூழ்கியுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. ஏராளமான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து