முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ். இயக்கத்துக்கு உதவினேன் அமெரிக்க ராணுவ வீரர் ஒப்புதல்

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

 வாஷிங்டன்,ஐ.எஸ். இயக்கத்துக்கு உதவினேன் என்று அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் ஒப்புக் கொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ். அமைப்புக்கு உதவியதாக கைகா காங் என்ற அமெரிக்க ராணுவ வீரர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து எப்.பி.ஐ. அதிகாரி சொரன்சன் கூறும் போது,

கடந்த 2016-ம் ஆண்டு முதல், கைகா காங் ஐ.எஸ். அமைப்புக்கு உதவி இருக்கிறார். அமெரிக்க ராணுவத்தின் ஆயுதங்கள் தொடர்பான ரகசியங்கள் அமெரிக்காவுக்குப் பணிபுரியும் அதிகாரிகளைப் பற்றிய ரகசியத்தையும் ஐ.எஸ். அமைப்பிடம் அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும் ஐ.எஸ். கொடியை காங் பிடித்தபடி இருப்பது போன்ற புகைப்படத்தையும் அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.

நீதிபதியின் முன் கைகா காங் கூறும் போது, நான் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிடம் பல ஆவணங்களை அளித்துள்ளேன். நான் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்திருந்தால் நிச்சயமாக தற்கொலைப் படை தீவிரவாதியாகி ஹோனோலுவில் உள்ள ராணுவ அலுவலகத்தைத் தாக்கி இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து