காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய திட்டம் வகுக்கும் இம்ரான் அரசு

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      உலகம்
Imran Khan 2017 10 12

இஸ்லாமாபாத்,காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான திட்டத்தை பாகிஸ்தானில் புதிதாக அமைந்துள்ள பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு வகுத்து வருகிறது.இது குறித்து பாகிஸ்தான் தொலைக்காட்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அந்நாட்டு மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷெரீன் மஸாரி கூறியதாவது:-

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பான திட்டத்தை இம்ரான் கான் அரசு வகுத்து வருகிறது. அந்தத் திட்டம், இன்னும் ஒரு வாரத்துக்குள் தயாரிக்கப்பட்டு விடும். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் அந்தத் திட்டத்தை அளித்து, அவர்களின் கருத்துகளை பாகிஸ்தான் அரசு கேட்டறியும்.

பின்னர் மத்திய அமைச்சரவை, பிரதமர் இம்ரான் கான் ஆகியோரின் ஒப்புதலுக்காக திட்டம் சமர்ப்பிக்கப்படும். அவர்களின் ஒப்புதல் கிடைத்ததும், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து