மத்திய அரசின் நிதியை காட்டிலும் மக்கள் அளித்த தொகை அதிகரிப்பு கேரள முதல்வர் பெருமிதம்

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      இந்தியா
Pinarayi 2017 6 8

திருவனந்தபுரம்,கேரள மாநிலத்துக்கு மத்திய அரசு அளித்த நிவாரணத் தொகையை விட மக்களும், பல்வேறு மாநில அரசுகளும் அளித்த நிவாரணத் தொகை அதிகமாக உள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 29-ம் தேதி தொடங்கி, பரவலாக மழை பெய்தது. மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பையடுத்து முதல் கட்ட நிவாரணப் பணிக்காக ரூ. 2 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் இருந்து முதல்வர் பினராய் கோரினார். ஆனால், மத்திய அரசு முதல்கட்டமாக ரூ. 600 கோடி மட்டுமே கேரள அரசுக்கு ஒதுக்கியது.

அதேசமயம், பல்வேறு மாநில அரசுகள், தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் கேரள மாநிலத்துக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 15 நாட்களில் மட்டும் பல்வேறு மாநில அரசுகள், தனிநபர்கள், நிறுவனங்கள் சார்பில் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.730 கோடி நிதி வந்துள்ளது என்று முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்தார்.

இது மத்திய அரசு வழங்கிய ரூ.600 கோடி நிதியைக் காட்டிலும் 21.7 சதவீதம் அதிகமாகும்.

மேலும், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 91 ஆயிரத்து 494 குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

இந்தப் பணம் நிவாரண முகாமில் இருப்பவர்களுக்கும், அல்லது நிவாரண முகாம்களில் இருந்து சென்றாலும் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனக் கேரள அரசு தெரிவித்துள்ளது.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து