டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் பெரும் சரிவு

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      இந்தியா
Reserve Bank 2017 01 18

புது டெல்லி,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 70.82 ரூபாய் ஆகியுள்ளது.

ஆசியாவிலேயே இந்தியாவிலும் மற்ற சில ஏழையான நாடுகளிலும்தான் டாலருக்கு நிகரான பணத்தின் மதிப்பு மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. தற்போது பல்வேறு பொருளாதார காரணங்களால் தொடர்ந்து டாலர் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்திலேயே இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது.தற்போது மேலும் இதில் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் 23 பைசா வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.82 ரூபாயை தொட்டுள்ளது. ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முதல்முறை இவ்வளவு மோசமான சரிவை சந்தித்துள்ளது.

இந்த மதிப்பு இன்னும் சரிவை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து