பாலியல் குற்றவாளிகளுக்கு தனிபதிவேடு அடுத்த மாதம் துவக்கம்: மத்திய அரசு

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      இந்தியா
central government(N)

புதுடெல்லி  : குழந்தைகள், பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு குற்ற ஆவணங்களில் பதிவு செய்யும் முறை அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது.

இதன் மூலம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களை அவமானப்படுத்தி, அவர்களின் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டைக் காட்டிலும் 2016-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பலாத்கார குற்றங்கள் 12 சதவீதம் அதிகரித்துள்ளன, கொடுமைகள் 3 சதவீதம் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்கும் முயற்சியாக முதல் முறையாக பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டை பராமரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் குறித்த தேசிய பதிவேடு அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது. குற்றங்கள் மற்றும் குற்றங்களை கண்காணிக்கும் நெட்வொர்க் மற்றும் சிஸ்டம்சிடமிருந்து பெறப்படும்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இதைத் தலைமை ஏற்று நடத்தி, பாலியல் குற்றவாளிகளை பதிவேட்டில் பதிவு செய்யும். தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு போலீஸார் குற்ற ஆவணக் காப்பகத்துறையிடம் அளிப்பார்கள். இதன் மூலம், பாலியல் குற்றங்களில் ஈடுபடாமல் எச்சரிக்கையாக இருக்க முடியும் எனத் தெரிவித்தார்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து