நாடு முழுவதும் வி.ஐ.பி.களுக்கு சுங்கச் சாவடிகளில் தனி வழி சென்னை ஐகோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      தமிழகம்
chennai high court

சென்னை,நாடு முழுவதிலுமுள்ள சுங்க சாவடிகளில் நீதிபதிகள் உள்ளிட்ட வி.ஐ.பி.க்களுக்கு தனி வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறினால், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளுக்கு விழுப்புரம் மற்றும் சேலம் வட்டார அரசுப் போக்குவரத்து கழகங்கள் செலுத்த வேண்டிய சுங்க கட்டண நிலுவையை செலுத்துவது தொடர்பாக கிருஷ்ணகிரி -வாலாஜாபேட் எல் அன்டு டி டோல்வே நிறுவனத்தால்  ஐகோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
வி.ஐ.பி.க்கள், பணியில் உள்ள நீதிபதிகள் டோல் பிளாசாக்களில் காக்க வைக்கப்படுகிறார்கள். 10 முதல் 15 நிமிடங்கள், சுங்க சாவடிகளில் வீணடிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது. எனவே, பணியிலுள்ள நீதிபதிகள், வி.ஐ.பி.க்களுக்கு டோல் பிளாசாக்களில் தனி வழி ஏற்படுத்த வேண்டும்.

நாட்டிலுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளுக்கும் இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அப்படி செய்யாவிட்டால், நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து