ராமநாதபுரம் கலெக்;டர் வீரராகவராவ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      ராமநாதபுரம்
rmd pro news

ராமநாதபுரம்-ராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் நலனுக்காக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த அரசுத் துறைகளின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  அதன்படி, 2016-2017 -ஆம் ஆண்டில்  பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் மொத்தம் 1,18,625  விவசாயிகள் மூலமாக 1,13,920 ஹெக்டேர் பரப்பளவில் நெல் மற்றும் இதர வேளாண் பயிர்களுக்கு பயிர்காப்பீடு செய்யப்பட்டது. அவற்றில் பயிர்காப்பீடு இழப்பீடு தொகையாக இதுவரையிலும் மொத்தம் ரூ.561.00 கோடி மதிப்பில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள 393 வருவாய் கிராமங்களில் இதுவரை மொத்தம் 382 வருவாய் கிராமங்களுக்குட்பட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பெருங்குளம், கூகுடி, தட்டனேந்தல்,  கள்ளிக்குடி, பொதுவக்குடி, சடைக்கானேந்தல், டி.கரிசல்குளம், பம்மனேந்தல், பெருநாழி, நீராவி, அரியமங்களம் ஆகிய 11 வருவாய் கிராமங்களுக்கு இழப்பீட்டுத் தொகையினை விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறை, நீர்வள நிலவள ஆதார அமைப்பு, மற்றும் பொதுப்பணித்துறையின் மூலம் பல்வேறு நீர்நிலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  குறிப்பாக, நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் வட்டத்தில் 22 கண்மாய்கள், பரமக்குடி வட்டத்தில் 31 கண்மாய்கள் என மொத்தம் 53 கண்மாய்கள் ரூ.20.51 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள்; நடைபெற்று வருகின்றன.  அதேபோல நீடித்த நிலையான மானாவாரி இயக்கத்தின் கீழ் 98 ஊரணிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. இதுதவிர குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் ரூ.31.20 கோடி மதிப்பில் 64 கண்மாய்களில் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
 மேலும் மத்திய அரசின் மூலம் சுயமாக சிறு தொழில் துவங்கும் பயனாளிகள் நலனுக்காக பிணையம் ஏதுமில்லாமல் கடனுதவி வழங்கிடும் திட்டமாக முத்ரா கடனுதவி  திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நலனுக்காக சிறப்பு முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் மாவட்டத்தின் சுற்றுச்சூழலை மேம்படுத்திடும் வகையில் அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்திடவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை அறவே தவிர்த்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு பேசினார். முன்னதாக மாவட்ட கலெக்டர் வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பாக 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2.50 லட்சம் அரசு மானியத்தில்  2 டிராக்டர் இயந்திரங்களையும், 1 பயனாளிக்கு ரூ.17,250 மதிப்பிலான அரசு மானியத்தில் உழு கலப்பை இயந்திரத்தினையும் என 3 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.2.67 லட்சம் மதிப்பிலான மானியத்துடன் கூடிய வேளாண் இயந்திரங்களை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சொர்ணமாணிக்கம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பி.ராஜா, வேளாண்மைப்பொறியியல் துறை செயற்பொறியாளர் எஸ்.எஸ்.காதர் சுல்தான், நபார்டு வங்கி மேலாளர் எஸ்.மதியழகன் உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.  

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து