முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினசரி வருகையை பதிவு செய்வதற்காக மின்னணு பதிவேடு இயந்திரத்தை மதுரை ஆணையாளர் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை,-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 நேதாஜி ரோட்டில் உள்ள வார்டு அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களின் தினசரி வருகையை பதிவு செய்வதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன மின்னணு முக அமைப்பு பதிவேடு (பயோ மெட்ரிக்) இயந்திரத்தை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,   துவக்கி வைத்தார்.
 மதுரை மாநகராட்சியில் காகித பயன்பாட்டை குறைக்கும் வகையிலும், பணியாளர்களின் தினசரி வருகையை கண்காணிக்கும் வகையிலும் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் நான்கு மண்டல அலுவலகங்கள் என  6 பயோ மெட்ரிக் கை ரேகை பதிவு செய்யும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு தினசரி வருகை பதிவு செய்யப்பட்டு  அதன் அடிப்படையில் மாதாந்திர ஊதியம் கணக்கிட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது துப்புரவு பணியாளர்களின் வருகையை பதிவு செய்வதற்காகவும் கண்காணிப்பதற்காகவும் இன்று முதல்முறையாக நேதாஜி ரோடு வார்டு அலுவலகத்தில் நவீன மின்னணு முக அமைப்பு பதிவேடு   இயந்திரம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்து பணியாளர்களின் முகத்தை பதிவு செய்யும் முறையினை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து மாநகராட்சியில் 60 இடங்களில் முக அமைப்பு பதிவேடு பொருத்தப்பட்டு வருகை பதிவேடு பதிவு செய்யப்படுவதுடன், அதன் அடிப்படையில் ஊதியம் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது.
    இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர்  .சதிஷ் ராகவன், உதவி ஆணையாளர்  .பிரேம்குமார், செயற்பொறியாளர்  சேகர், மக்கள் தொடர்பு அலுவலர்  .சித்திரவேல், சுகாதார அலுவலர்  ராஜ்கண்ணன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து