சித்தராமையா மற்றும் எனது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கிறது அரசு எடியூரப்பா குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      இந்தியா
Yeddyurappa 2017 2 14

பெங்களூரு, முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் எனது தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

பா.ஜனதாவில்... கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் பாபுராவ் சின்சனசூர். அமைச்சரவை மாற்றத்தின்போது, அவரிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்தார். தனது அமைச்சர் பதவி பறிபோனதற்கு, மல்லிகார்ஜூன கார்கே தான் காரணம் என்று அவர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டிய அவர், நேற்று எடியூரப்பா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார்.

ஒட்டுக்கேட்கிறது...
இந்த விழாவில் பேசிய எடியூரப்பா, ``சித்தராமையா மற்றும் என்னுடைய தொலைபேசிகளை கர்நாடக அரசு ஒட்டுக்கேட்கிறது. இது 100-க்கு 100 சதவீதம் உண்மை. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இதற்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதால், அப்போது இருந்த அரசுக்கு என்ன நடந்தது என்பதை மாநில அரசு நினைவில்கொள்ள வேண்டும்.

இந்த தொலைபேசி ஒட்டுக்கேட்பு பிரச்சனை குறித்து ஒரு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று எடியூரப்பா வலியுறுத்தினார்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து