ஆசியப் போட்டி தடகளம்: இந்தியா 2 தங்கம் உள்பட 3 பதக்கத்தை வென்றது

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Athlet Hima Das 2018 8 30

ஆசியப் போட்டி தடகளத்தில் இந்தியா நேற்று 2 தங்கம் உட்பட 3 பதக்கத்தை வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி தடகளம் இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. இதில், குண்டு எறிதலில் சீமா புனியாவும், மகளிர் 1500 மீ ஓட்டத்தில் சித்ரா உன்னிகிருஷ்ணன் வெண்கலம் வென்றனா். 800 மீ ஆடவா் ஓட்டத்தில் தங்கம் வென்ற மஞ்சித் சிங், வெள்ளி வென்ற ஜின்சன் ஆகியோர் 1500 மீ. ஓட்ட இறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றிருந்தன. இந்நிலையில் இறுதிச் சுற்று நேற்று நடைபெற்றன.

ஜின்ஸனுக்கு தங்கம்...

இதில், ஜின்ஸன் அற்புதமாக ஓடி தங்கம் வென்றார்.  அவா் பந்தய தூரத்தை 3:44:72 நிமிட நேரத்தில் கடந்து முதல் தங்கத்தை வென்றார். இது அவா் வெல்லும் 2-வது பதக்கமாகும். அதே நேரத்தில் 800 மீ சாம்பியன் மஞ்சித் சிங் 3:46:57 நிமிட நேரத்தில் ஓடி 4-வது இடத்தையே பெற முடிந்தது.

குண்டு எறிதலில் வெள்ளி...

மகளிர் குண்டு எறிதலில் நடப்பு சாம்பியன் சீமா புனியாவும், சந்தீப் குமாரியும் இறுதிச் சுற்றில் பங்கேற்றனா். முதல் முறை 58.51 மீட்டரும், இரண்டாவது தவறாக எறிந்தும், மூன்றாவது முறை 62.26 மீ தூரம் எறிந்தார். சீமா. 5-வது முறையும் தவறாக எறிந்தார். இந்நிலையில் 6-வது முறை 61.18 மீ தூரம் எறிந்து வெண்கலம் வென்றார் புனியா.  அவா் ஏற்கெனவே 2006, 2010, 2014 போட்டிகளிலும் பதக்கம் வென்றிருந்தார். தற்போது தங்கத்தை இழந்து வெண்கலம் வென்றுள்ளார். சந்தீப் குமாரி 54.61 மீ தூரம் மட்டுமே எறிந்து 5-ஆவது இடத்தைப் பிடித்தார்.

மகளிர் 1500 மீ ஓட்டம்....

1500 மீ. இறுதிச் சுற்றில் இந்தியாவின் சித்ரா, மோனிகா பங்கேற்றனா். இதில் சித்ரா சிறப்பாக பந்தய தூரத்தை 4:12:56 நிமிட நேரத்தில் கடந்து வெண்கலம் வென்றார்.  ஆசிய விளையாட்டுப் போட்டியின் 4x400 மீ தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கமும், ஆடவர் அணி வெள்ளிப் பதக்கமும் வென்றது.

மகளிர் 4x400 மீ ஓட்டம்...

இதில், இந்திய அணி சார்பாக ஹீமா தாஸ், பூவம்மா ராஜூ மச்சேத்திரா, சரிதாபென் லக்ஷ்மன்பாய் காயக்வாட், விஸ்மாயா வெல்லுவா கோரோத் ஆகியோர் பங்கேற்றனர்.  இவர்கள் 3:28.72 நிமிட நேரத்தில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தது. இதன்மூலம், இவர்கள் இந்தியாவுக்கு 13-வது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தனர்.

ஆடவர் 4x400 மீ ஓட்டம்...

இதில், இந்தியா சார்பில் குன்ஹூ முகமது புத்தன்புரக்கல், தருண் அய்யாசாமி, முகமது அனாஸ் யாஹியா, ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள், வெற்றி இலக்கை 3:01.85 நிமிட நேரத்தில் அடைந்து 2-வது இடம் பிடித்தனர். இதன்மூலம், இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.  ஆசியப் போட்டி பதக்கப்பட்டியலில் இந்தியா 13 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களுடன் 8-வது இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து