4-வது டெஸ்ட் போட்டி:இந்திய வீரர்கள் பந்துவீச்சில் இங்கிலாந்து அணி திணறல்

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
indian cr 30-08-2018

சவுதம்டன்,இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறி வருகிறது.

சுற்றுப்பயணம்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று தொடங்கியது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்தும், நாட்டிங்காமில் நடந்த 3–வது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதிக வாய்ப்பு:

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. ஒரு வார கால ஓய்வுக்கு பிறகு இரு அணி வீரர்களும் புத்துணர்ச்சியுடன் களம் இறங்கி உள்ளனர். இந்த மைதானத்தில் இதுவரை 2 டெஸ்ட் மட்டுமே நடந்துள்ளன. 2011–ம் ஆண்டில் இலங்கையுடன் டிரா செய்த இங்கிலாந்து அணி 2014–ம் ஆண்டில் இந்தியாவை தோற்கடித்து இருந்தது. இந்த ஆடுகளத்தில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

அணி வீரர்கள் விவரம்

இங்கிலாந்து:

அலஸ்டயர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, சாம் குர்ரன், அடில் ரஷித், ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன்.

இந்தியா:
தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹர்திக் பாண்ட்யா, ரிஷாப் பான்ட், அஸ்வின், முகமது ‌ஷமி, இஷாந்த் ‌ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா.

பேட்டிங் தேர்வு...

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 15 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தவித்து வருகிறது. பூம்ரா தனது முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆட்டத்தில் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் தொடக்க வீரரான ஜென்னிங்ஸ் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து கேப்டன் ரூட் 4 ரன்களில் இஷாந்த் சர்மா ஓவரில் வெளியேறினார்.

இங்கிலாந்து அணி ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து விளையாடிய  இங்கிலாந்து 57 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பூம்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து