அமெரிக்கர்கள் வடகொரியாவுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      உலகம்
America 2017 03 17

வாஷிங்டன்,வடகொரியாவுக்கு அமெரிக்கர்கள் செல்வதற்கான தடையை நீட்டித்து அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க உள்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,

வடகொரியாவுக்கு அமெரிக்கர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை இன்றுடன் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், இந்த தடை நீட்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசுக்கு வெளிநாடுகளிலும் அமெரிக்க மக்களின் பாதுகாப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே தான் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வடகொரியாவுக்கு கட்டாயம் செல்ல வேண்டுமென்றால் குறிப்பிட்ட பணிகளின் அடிப்படையில் அமெரிக்க அரசின் அனுமதியுடன் மட்டுமே பயணிக்க வேண்டும். அதற்காக சிறப்பு விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து