பயங்கரவாத பிடியில் இருந்து தெற்காசியா விடுபடுவது பாக். கையில் உள்ளது: இந்திய தூதர்

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      உலகம்
Akbaruddin 31-08-2018

நியூயார்க்,பயங்கரவாதம் மற்றும் வன்முறையின் பிடியில் இருந்து தெற்காசியா விடுபடுவது பாகிஸ்தானின் கைகளில்தான் உள்ளது என்று ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்தியாவுக்கான நிரந்தரத் தூதர் சையது அக்பருதீன் பேசினார்.

நியூயார்க்கில் நடைபெற்ற விவாதத்தின்போது பாகிஸ்தானுக்கான ஐ.நா. தூதர் மலீகா லோதியா காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்தியாவுக்கான நிரந்தர தூதர் அக்பருதீன் பேசியதாவது:-

காஷ்மீர் மட்டுமல்லாது தெற்காசியா முழுவதும் அமைதி நிலவுவது என்பது பாகிஸ்தானின் கைகளில்தான் உள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டி விடும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். பாகிஸ்தானில் இப்போது அமைந்துள்ள புதிய அரசாவது இந்த விஷயத்தில் சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தி விட்டு, தங்கள் நாட்டில் உள்ள பயங்கரவாத இயக்கங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச அரங்கில் பலமுறை நிராகரிக்கப்பட்ட ஒரு விஷயத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஐ.நா.வில் எழுப்பி வருகிறது என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து