காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து: விசாரணையை ஜனவரிக்கு ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்

புது டெல்லி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை நீக்கக் கோரித் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையை ஜனவரி 2-வது வாரத்துக்கு ஒத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடியும் வரை வழக்கு மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் விடுத்த வேண்டுகோளை அடுத்து சுப்ரீம் கோர்ட் இந்த முடிவை எடுத்துள்ளது.
நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி சந்திரசூட்,
உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடியட்டும். உள்ளாட்சித் தேர்தலின் போது வழக்கை விசாரித்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதனால் தற்போது வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.ஜம்மு - காஷ்மீரில் 8 கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் செப்டம்பரில் தொடங்கி டிசம்பரில் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.