கங்கை நதி முழுமையாக 2020-ல் சுத்தமாகும்: கட்காரி

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      இந்தியா
nitin-gadkari 2017 09 01

மும்பை, கங்கை நதி மார்ச் 2020-ல் முழுமையாக சுத்தமாகும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய கட்காரி, நமாமி கங்கை திட்டத்தின் கீழ் செயல்படும் 221 திட்டங்களும் முடிவடையும் தருவாயில் உள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.22,238 கோடி ஆகும். வேலை நடைபெறும் வேகத்தைப் பொறுத்து, மார்ச் 2020-ல் கங்கை நதி முழுமையாக சுத்தமாகும். இது கடினமான காரியம்தான்.

ஆனாலும் இதை செய்து முடிப்போம்.கங்கை நதி மட்டுமல்லாது கிளை நதிகளையும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நமாமி கங்கா இலக்கின் கீழ் செயல்படும் 221திட்டங்களில் 191 திட்டங்கள் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஜார்கண்ட் பகுதிகளில் அதிகப்படியான மாசுக்குக் காரணமாக இருக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கிராமப்புற சுத்திகரிப்பைக் கையாளும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து