முதல்வராகி 100 நாட்கள் நிறைவு ராகுலுடன் குமாரசாமி சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      இந்தியா
DAMU 13 PIC

பெங்களூர், கர்நாடக முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்று, 100 நாட்களை நிறைவு செய்ததை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி அமைத்த பிறகு, முதல்வர் குமாரசாமி பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். பல்வேறு நெருக்கடிகளை கடந்து முதல்வராக பதவியேற்று குமாரசாமி நேற்று முன்தினத்துடன் 100 நாட் களை நிறைவு செய்தார்.

இந்நிலையில் டெல்லி சென்ற குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து