இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4-ல் வெளியிடப்படும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      தமிழகம்
election commissioner 31-08-2018

சென்னை, 2019 ஜனவரி 4-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, வாக்காளர் பட்டியரில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் வாக்காளர் பட்டியல் குளறுபடி, பூத் முகவர்கள் நியமனம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து கட்சி பிரதிநிதிகளிடம் தலைமை தேர்தல் அதிகாரி கேட்டறிந்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய தலைமை தேர்தல் அதிகாரி,

வரும் ஜன.1-ம் தேதியுடன் 18-வயது நிறைவடைவோர் தங்களது பெயர்களை சேர்க்க வசதியாக வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் செப். 1-ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்றும், இறுதி வேட்பாளர் பட்டியல் ஜனவரி 4-ம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறினார்.

சிறப்பு வாக்காளர் முகாம் செப்டம்பர் 9 மற்றும் 23, அக்டோபர் 7, 14-ஆம் தேதிகளில் நடைபெறும். பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் சுமார் ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்படும். இந்த ஆண்டு இதுவரை 5.72 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் 4 லட்சம் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர்.

வாக்குச்சாவடி எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு முகவர்களை நியமனம் செய்யும்படியும் அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து