பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நேரு குடும்பம்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது: பா.ஜ.க.

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      இந்தியா
sambit patra 31-08-2018

புதுடெல்லி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நேரு குடும்பம்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
 இதுதொடர்பாக பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில்,

கடந்த காலங்களில் நேரு குடும்பம் தான் மக்களின் பணத்தை அதிகம் கொள்ளையடித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கொள்ளையடிக்கப்பட்ட அந்த பணம் எதற்கும் உதவாமல் போனது. எனவே இதனால் நேரு குடும்பம் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் இதனை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இதுதொடர்பாக ராகுலின் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் அரசியலில் அவர் தீவிரமாக இல்லை என்பதை காட்டியுள்ளது. மேலும் விமர்சிக்க எந்த காரணமும் இல்லாத காரணத்தால் தான், கடந்த உத்தர பிரதேச தேர்தல் முதல் தொடர்ந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை குற்றம்சாட்டி வருகிறார்.

ஜனநாயகத்தின் சிறந்த நீதிபதிகளாக மக்கள் தான் உள்ளனர். எனவே தான் அவர்கள் காங்கிரஸ் கட்சியை மட்டும் நிராகரிக்கவில்லை. அதன் தலைவர் ராகுலையும் சேர்த்து நிராகரித்துவிட்டனர் என்றார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து