வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.71 கோடி வழங்கினார் நீதா அம்பானி

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      இந்தியா
Nita Ambani 31-08-2018

திருவனந்தபுரம், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நிவாரணத்துக்கான நிவாரண நிதியாக ரூ.21 கோடியும், ரூ.50 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களையும் வழங்கினார் ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீதா முகேஷ் அம்பானி.

கேரளத்தில் மே 28-ஆம் தேதி தொடங்கிய பருவமழை மற்றும் அதன் வெள்ள பாதிப்புகளால் 483 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காணாமல் போயினர். மாநிலத்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சேதத்தின் மதிப்பு, மாநிலத்தின் ஆண்டுத் திட்டத்துக்காக மதிப்பிடப்பட்டுள்ள தொகையைக் காட்டிலும் (சுமார் ரூ.37,247 கோடி) அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

100 ஆண்டுகளில் வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் உருக்குலைந்த கேரளத்துக்கு மத்திய அரசு நிவாரண உதவியாக இதுவரை ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளது. மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்கள், தனி நபர்களும் நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர்.

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேளாவில், கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் வெள்ளம் பாதித்த இடங்களில் ரிலையன்ஸ் அறக்கட்டளை 30 பேர் கொண்ட குழுவை அமைத்து தனது இலவச ஹெல்ப்லைன் மூலம் நிவாரணம் மற்றம் மீட்பு பணிகளைச் செய்து வந்தது. எர்ணாகுளம், வயநாடு, ஆலப்புழா, திரிசூர், இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா ஆகிய ஆறு மாவட்டங்களில் இருந்து வெற்றிகரமாக 1,600 பேரை இந்த குழு மீட்டது.

ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீத்தா அம்பானி, கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார். ஹரிபட்டு, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவர்களை சந்தித்த அவர், அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இந்நிலையில், ரிலையன்ஸ் அறக்கட்டளை ஏற்கனவே அறிவித்தது போல, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.21 கோடி நிதியும், ரூ.50 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களையும் ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீதா முகேஷ் அம்பானி, கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து