முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மாநில மறுசீரமைப்பு பணிகள்: முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

 திருவனந்தபுரம்,கேரள மாநிலம் மறுசீரமைப்பு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இருந்து மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

கேரள மாநிலத்தை மறுசீரமைப்பது தொடர்பாக கே.பி.எம்.ஜி எனும் நிறுவனத்தை ஆலோசகராக நியமிக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. சிறு, குறு தொழில்முனைவோருக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.வெள்ள பாதிப்புகளால் பொருட்களை இழந்துள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான பொருட்களை மீண்டும் வாங்கும் விதமாக தலா ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் குடும்பஸ்ரீ திட்டத்தின் கீழ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சபரிமலை யாத்திரை தொடங்கும் முன்பாக பம்பா நகரம் மற்றும் சபரிமலை செல்லும் பாதைகளை மறுசீரமைக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மலையாளிகளை ஒன்றிணைத்து, நிதி திரட்ட அனைத்து நாடுகளுக்கும் அமைச்சரவைக் குழு நேரில் சென்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கேரள வெள்ள பாதிப்புகள் தொடர்பாக அம்மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.1,027 கோடி நிதி திரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து