ஜனதாதளம் , காங்கிரஸ் உறவு சுமூகமாக உள்ளது: தேவகவுடா

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      இந்தியா
deve gowda 2018 05 03

பெங்களூர்,ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் இடையிலான உறவு சுமூகமாக இருப்பதாக முன்னாள் பிரதமர் , தேவகவுடா தெரிவித்தார்.இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தேவுகவுடா  கூறியதாவது:ம.ஜ.த. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான நல்லுறவு சுமூகமாக உள்ளது. இக்கட்சிகளுக்கு இடையே எந்தப் பிரச்னையும் கிடையாது.

இக்கூட்டணி நிச்சயம் பா.ஜ.க.-வை பதவிக்கு வர விடாது. பா.ஜ.க.-வுக்கு எதிராக இணைந்து செயல்பட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும். மேலும் இக்கூட்டணி தான் கர்நாடக உள்ளாட்சித் தேர்தலிலும் பா.ஜ.க.-வை தோற்கடிக்கும்.மேலும் இதே கூட்டணி வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும் என்றார்.

காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. இடையிலான கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசலின் மத்தியில் கர்நாடகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் வேளையில், தேவகவுடாவின் இக்கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து