இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      உலகம்
dramb31-08-2018

இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக கருவிகளை வாங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அமெரிக்காவின் கொள்கை காரணமாக, இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அந்நாட்டுக்கு சலுகை வழங்கப்படும் என்ற கருத்து நிலவுகிறது. இது தவறான கருத்து. இந்தியாவுக்கு சலுகை வழங்கி பொருளாதார தடை விதிக்க மாட்டோம் எனக் கூற முடியாது. இதுகுறித்து அதிபர் தான் முடிவெடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து