தாய்லாந்து பிரதமர் - மோடி சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      உலகம்
modi31-08-2018

பிம்ஸ்டெக் அமைப்பின் 2 நாள் மாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தொடங்கியது. இதில் தாய்லாந்து பிரதமர் பிரயூத் சன்-ஒச்சா-வை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசித்தனர்.  இரு தரப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், சந்திப்பு ஆக்கப்பூர்வமான வகையில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. முன்னதாக நேற்று காலை பிம்ஸ்டெக் தலைவர்களுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்து பேசிக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து