இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்வித்தரம் உயர்ந்து காணப்படுகிறது சேலத்தில் முதல்வர் எடப்பாடி பேச்சு

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      தமிழகம்
edappadi palanisamy 30-08-2018

சேலம்,  இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கல்வித்தரம் உயர்ந்து காணப்படுகிறது என்று சேலத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பேசினார்.
சேலம் நேரு கலையரங்கில் நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார். பின்னர் முதல்வர் எடப்பாடி பேசியதாவது,
 

உயர்ந்திருக்கிறது...அம்மா தலைமையிலான அரசு மாணவச் செல்வங்களுக்கு பல்வேறு திட்டங்களை வகுத்து அளித்ததன் மூலமாக இன்றைக்கு இந்தியாவிலேயே கல்வித்தரம் தமிழகத்தில் உயர்ந்து காணப்படுகின்றது. கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை இன்றைக்கு உயர்ந்திருக்கிறது. அம்மா கண்ட கனவை அம்மாவினுடைய அரசு நனவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே அதிக அளவு கல்வி கற்கக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்குக் காரணம், அதிகமான ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் என்று அந்தந்தப் பகுதிகளில் இருக்கின்ற மாணவ, மாணவியர் அங்கேயே கல்வி கற்கக்கூடிய சூழ்நிலையை இன்றைக்கு அம்மாவினுடைய அரசு உருவாக்கித் தந்ததுதான்.

அடிப்படை வசதிகள்... அதற்காக புதிய, புதிய பள்ளிகளை திறந்திருக்கின்றோம். அதேபோல, மாணவச் செல்வங்கள் சிறந்த கல்வி கற்க வேண்டுமென்பதற்காக அம்மாவினுடைய அரசு மாணவர்களுக்கு காலணி, சீருடை, நோட்டு, புத்தகம், சைக்கிள், அறிவுப்பூர்வமாக கல்வி கற்பதற்கு மடிக்கணினி, எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 1, பிளஸ் 2 படித்தால் ஊக்கத் தொகை போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, மாணவர்களை ஊக்கப்படுத்தி, கல்வியில் சிறந்த மாநிலமாக இன்றைக்கு தமிழ்நாடு திகழ்கின்றது. அம்மா ஆட்சியில் கொண்டு வந்த அத்தனை திட்டங்களும் இன்றைக்கு மாணவச் செல்வங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. 

அனைத்து வசதிகளும்... அதேபோல, மாணவச் செல்வங்களுக்குத் தேவையான பள்ளிக் கட்டிடங்கள், கூடுதல் கட்டிடங்கள், விளையாட்டு மைதானம், கழிவறை வசதி, குடிநீர் வசதி என அனைத்து வசதிகளையும் அனைத்து பள்ளிகளிலும் அம்மாவினுடைய அரசு செய்து கொடுத்திருக்கின்றது. தனியார் பள்ளிகளுக்கு இணையான அனைத்து வசதிகளும் அரசு பள்ளிகளில் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. அரசுப் பள்ளிகளில் படித்தால், உயர்கல்வி, தொழிற்கல்வி ஆகியவற்றிற்குச் செல்ல முடியாது என்ற நிலையை மாற்றி, உயர்கல்வி, தொழிற்கல்வி படிக்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கித் தந்த அரசு அம்மாவினுடைய அரசு. சாதாரண குடும்த்தில் பிறந்த மாணவ, மாணவியர்கூட உயர்கல்வி கற்கக்கூடிய சூழ்நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து