முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மழைவெள்ள பாதிப்பு:நிவாரண நிதி ரூ.1027 கோடியாக உயர்வு

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், கேரள மழைவெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதி ரூ.1027 கோடியாக உயர்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மே மாதம் 28-ம் தேதி தொடங்கியதில் இருந்து மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகிய பாதிப்புகளில் இதுவரை மொத்தம் 483 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 14 பேர் காணாமல்போய் உள்ளனர். இந்த பேரிடரால் மாநிலத்தின் பொருளாதாரம் மிகவும் பாதித்துள்ளது.

ஆண்டு திட்ட மதிப்பீடான ரூ.37,247.99 கோடியைவிட இழப்பு மிக அதிகமாக உள்ளது.இதற்காக மத்திய அரசு நிவாரண உதவியாக இதுவரை ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளது. பேரழிவின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப கூடுதல் நிதி உதவியை மத்திய அரசு அளிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.730 கோடி கிடைத்திருந்தது. இதுதவிர நிலமாகவும், நகைகளாகவும் நிவாரண நிதிக்கு கிடைத்தது.

இந்நிலையில் கேரள மழைவெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதி ரூ.1027 கோடியாக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரூ.145 கோடி வரையில் பல்வேறு வங்கிகளின் மூலம் பெறப்பட்டுள்ளன. இதில் ஸ்டேட் பேங்க் மூலமாகவும், தனியார் வங்கியான ஹெ.டி.எஃப்.சி மூலமாகவும் அதிக அளவில் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காசோலை மூலமாக ரூ.185 கோடி பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து