முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலத்தில் பசுமை வெளி பூங்காக்கள் முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சேலம், சேலத்தில் ரூ. 4 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 12 பசுமை வெளி பூங்காக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களின் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது, சேலம் மாநகராட்சி சேலம் நகர மக்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் சேலம் நகரத்தை அனைத்து வகையிலும் முதன்மை நகரமாக உருவாக்க  பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில்  சூரமங்கலம் மண்டலத்தில்  தர்மா நகர், கீழ்மேம்பாலம் நகர், அபிராமி கார்டன், அஸ்தம்பட்டி மண்டலத்தில் பிரகாசம் நகர், பரமன் நகர், குறிஞ்சி நகர், கம்பர் தெரு, அம்மாபேட்டை மண்டலத்திலுள்ள அய்யாசாமி பார்க், கொண்டலாம்பட்டி மண்டலத்திலுள்ள அபிராமி கார்டன் ஆகிய 9 இடங்களில்  4 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள  பசுமை வெளி பூங்காக்கள் இன்று சேலம் நகரத்து மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காக்களில் மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் நடை பயிற்சி செய்ய ஏதுவாக நடைபாதைகள், 8 வடிவிலான நடைபயிற்சி மேடைகள், தியான மண்டபம், மூலிகை பண்ணைகள், இறகு பந்து, கூடைப் பந்து விளையாட்டு திடல்கள், உடற்பயிற்சி கூடங்கள், குழந்தைகளை கவரும் வண்ண ஓவியங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், வண்ண ஒளி விளக்குகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

சேலம் மாநகர மக்கள் பயன்படுத்துகின்ற விதத்திலே பசுமைப் பூங்கா இன்றைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அம்மாவினுடைய அரசு ஆங்காங்கே இருக்கின்ற மூத்த குடிமக்கள், பொதுமக்கள், சிறுவர்கள் பொழுதுபோக்குவதற்கும், நடைப்பயிற்சி செய்வதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் தேவையான அடிப்படை வசதியுடன் கூடிய பசுமைப் பூங்கா அம்மாவினுடைய அரசால் சேலம் மாநகரத்திலே உருவாக்கப்பட்டிருக்கிறது.

சேலம் மாநகரம் முழுவதும் 12 பசுமை பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இதனுடைய மதிப்பு ரூபாய் 5 கோடியே 63 லட்சத்து 46 ஆயிரம். சேலம் மாநகரம் வளர்ச்சி பெறுகின்ற மாவட்டமாக திகழ்கின்றது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து