பாராளுமன்றம் - சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      தமிழகம்
edapadi cm 2017 09 30

சேலம், ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வந்தால் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாநகரில் ரூ.5.07 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 12 பசுமைவெளி பூங்காக்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அம்மாப்பேட்டை அய்யாசாமி பூங்காவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பூங்காக்களை திறந்து வைத்தார் முதல்வர். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனனிசாமி பேசும் போது கூறியதாவது:-

இந்தியளவில் தமிழகத்தில் கல்வித் தரம் உயர்ந்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் இல்லா தமிழகமாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  பல்வேறு துறைகளில் முன்னோடி மாவட்டமாக சேலம் திகழ்கிறது.

பிளாஸ்டிக் மாசில்லா சேலம் மாவட்டம் என்ற விழிப்புணர்வு பிரசார முகாமை அவர் தொடங்கி வைத்தார். அ.தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏக்கள், ஆட்சியர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருளை தடை செய்வதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையிலே, 2019 ஜனவரி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருளை தடை செய்கின்ற ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை சென்னையிலே துவக்கி வைத்துள்ளேன். அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் மாவ்ட்ட ஆட்சியாளர் தலைமையில், அமைச்சர்கள் ஆங்காங்கே சென்று இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற நிகழ்ச்சியை துவக்கி வைத்துள்ளனர்.

கேள்வி: மாற்று ஏற்பாடு என்ன செய்யப் போகிறீர்கள்.?
பதில்: மாற்று ஏற்பாடு தான் முன்பாகவே கண்காட்சியில் வைத்திருக்கிறோம். நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள்.
கேள்வி: உற்பத்தி பெருக்குவதற்கான தமிழக அரசின் நடவடிக்கை எப்படி இருக்கும்.?
பதில்: நிச்சயமாக அதற்கு தேவையான ஊக்கத்தொகையை அரசு அளிக்கும்.
கேள்வி: ஸ்மார்ட் சிட்டி 100 கோடி ரூபாய் திட்டத்தை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறார்களே ?
நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அதற்கு மேல் விவரம் அளிக்க முடியாது.

கேள்வி: மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே நேரத்திலே தேர்தல் வைக்க வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரை செய்திருப்பது குறித்து?
ஒரே நேரத்திலே தேர்தல் வைப்பதை பொறுத்தவரைக்கும், 2021 வரை ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொடர்ந்து செயல்பட வேண்டுமென்று ஏற்கனவே நாம் தெரிவித்திருக்கின்றோம். நம்முடைய கருத்தை தெரிவித்திருக்கின்றோம். அது மட்டுமல்லாமல், ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டுமென்று சொன்னால் அதற்கு தேவையான கருத்துறு எட்டப்பட வில்லை என்று தான் கருதுகின்றேன். ஆகவே எப்படி தேர்தல் வந்தாலும், நாங்கள் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம்.
கேள்வி: தேர்தல் வாக்குசீட்டு முறையை நீங்கள் ஆதரவு தெரிவிக்கிறீர்களா?.
வாக்குசீட்டு முறை வந்தாலும் சரி, ஏற்கனவே இருக்கின்ற மின்னணு மூலமாக வாக்களிக்கின்ற முறையாக இருந்தாலும், எங்களை பொறுத்தவரைக்கும், எதிலும் சந்தேகம் கிடையாது. மக்கள் எஜமானர்கள். மக்கள் நீதி வழங்குவார்கள். அவர்களுடைய நீதியை தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோமே ஒழிய வாக்குசீட்டோ, மின்னணு மூலமாகவோ, எந்த தவறும் நடைபெறுவதாக எங்களுக்கு தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் எது இருந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
கேள்வி: ராசிபுரம் பகுதியில அணை கட்டுவதற்கான நடவடிக்கை தமிழக அரசு எடுக்கிறதா.?
அதையெல்லாம் அரசு பரிசீலித்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து