250 விக்கெட் எடுத்த இஷாந்த் சர்மா

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Ishant Sharma 31-08-2018

சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி டாஸ் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து கேப்டன் ரூட் 4 ரன்கள் எடுத்திருந்தபோது இஷாந்த் சர்மா பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 250-வது விக்கெட் ஆகும். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுக்களை வீழ்த்திய 3-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையையும் இஷாந்த் சர்மா படைத்தார்.

கபில்தேவ் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து