எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர்

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018      உலகம்
Australia s former prime minister 01-09-2018

 கான்பெரா,ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக அண்மையில் பிரதமர் பதவியிலிருந்து விலகிய மால்கம் டர்ன்புல், தனது எம்.பி. பதவியையையும் ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பெரும்பான்மை அபாயகரமான அளவுக்குக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது, ஆளும் லிபரல் கட்சி ஒரே ஒரு கூடுதல் எம்.பி.யின் ஆதரவுடன் மட்டுமே ஆட்சி நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

மால்கம் டர்ன்புல்லின் ராஜிநாமா குறித்து, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதாவது:-
முன்னாள் அதிபர் மால்கம் டர்ன்புல், தனது எம்.பி. பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜிநாமா செய்துள்ளார். தனது 14 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் அவர் நாட்டு மக்களுக்கு சிறப்பான சேவையாற்றியிருக்கிறார்.

ஆஸ்திரேலிய மக்கள் மற்றும் வென்ட்வெர்த் தொகுதி வாக்காளர்களின் அன்பைப் பெற்றுள்ள அவர், பிரதமராக தனது பணியை சிறப்புற மேற்கொண்டார் என்று மோரிசன் தெரிவித்துள்ளார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து