உலகப் பொருளாதார அமைப்பிலிருந்து விலகப் போவதாக டிரம்ப் எச்சரிக்கை

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018      உலகம்
drump 01-09-2018

வாஷிங்டன், உலகப் பொருளாதார அமைப்பில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், அந்த அமைப்பிலிருந்து விலகப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
 

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:-
உலகப் பொருளாதார அமைப்பை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்தான், உலகிலேயே மிக மோசமான பொருளாதார ஒப்பந்தமாக இருக்கும். அந்த அமைப்பில் அமெரிக்காவுக்கு எதிரான அம்சங்களைப் போக்கி, சீர்திருத்தத்தை ஏற்படுத்தாவிட்டால் அந்த அமைப்பை விட்டு வெளியேறுவோம் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து