முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பிஞ்சு பாதங்களால் அடிமேல் அடி வைத்து தத்தி தத்தி நடந்து வருகிறான் ஆலிழை கிருஷ்ணன்

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

 இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் இன்று 2-ம் தேதி வரும் திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது.

கிருஷ்ணர் அவதார வரலாறு:
மதுரா நகரில் தேவகி - வாசுதேவருக்கு எட்டாவது மகனாக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்தார். கிருஷ்ணர் பிறந்தது சிறைச்சாலையில். சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ணர் கோகுலத்தில் வளர்ப்புத் தாய் யசோதையால் வளர்க்கப்பட்டான். தனது தாய் மாமன் கம்சனைக் கொன்று துவாரகையில் அரசாட்சி செய்தார்.

கிருஷ்ணர் பாதம்
பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்தவரும் கண்ணன்தான். தேரோட்டியாக வந்த கண்ணன்தான் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார். தேரோட்டியாக வந்த கண்ணன், அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மக்களின் புனித நூலான பகவத் கீதையாக உள்ளது. தன் கடைசிக் காலத்தில் வேடன் ஒருவன் எய்த அம்பு காலில் தைக்க பூலோகத்தில் கண்ணன் அவதாரத்தை முடித்து மீண்டும் வைகுண்டம் சென்றார் என்று கூறப்படுவது உண்டு.

கண்ணா... முகுந்தா...
கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை கண்ணா ... முகுந்தா ... என்று பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணைப் போல காப்பவன் என்றும் முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து முக்தி அளிப்பவன் என்றும் நம்புகிறோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து