நாடு முழுவதும் அஞ்சலக வங்கி சேவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018      இந்தியா
modi postel 01-09-2018

புது டெல்லி, நாடு முழுவதும் அஞ்சல் செலுத்துகை வங்கி சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின் நிதி சார்ந்த அனைத்தும் உள்ளடக்கிய நிலைமை என்ற நோக்கத்தை விரைவாக அடைவதற்கென அஞ்சல் செலுத்துகை வங்கி சாதாரண மனிதனுக்கான எளிதில் அணுகக்கூடிய குறைந்த கட்டணத்திலான நம்பிக்கை மிகுந்த வங்கியாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கி நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவியுள்ள மூன்று லட்சம் தபால்காரர்கள் மற்றும் கிராம அஞ்சல் பணியாளர்களை கொண்ட அஞ்சல் துறையின் மிகப் பெரிய கட்டமைப்பை இதற்கு பயன்படுத்திக் கொள்வதே நோக்கமாகும்.

இந்நிலையில், டெல்லி தால்கடோரா அரங்கில் இந்திய அஞ்சலக செலுத்துகை வங்கியை பிரதமர் நரேந்திர காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.  அப்போது பிரதமர் மோடி பேசுகையில், அஞ்சலக செலுத்துகை வங்கி சேவையை நாட்டின் உள்ள ஓவ்வொரு மூலையிலும் கொண்டு செல்வோம். ஓவ்வொரு வீட்டு வாசலிலும் அஞ்சலக செலுத்துரை வங்கி சேவை கிடைக்கும்.

நாட்டில் உள்ள அனைத்து 1.55 லட்சம் அஞ்சலக கிளைகளும் இந்த ஆண்டு டிசம்பர் 31-க்குள் அஞ்சல் செலுத்துகை வங்கி அமைப்புடன் இணைக்கப்பட்டுவிடும் என தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து