அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018      தமிழகம்
jayakumar 01-09-2018

சென்னை,அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.இந்திய குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரான டாக்டர் சேப்பனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் மற்றும் அவரது வாழ்க்கை வரலாறு குறித்து எழுதப்பட்ட புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில்  அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள், எங்களிடம் பணம் இருந்திருந்தால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்கி இருப்போம் என தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்திருந்தது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், உலக அளவில் பணக்காரக் குடும்ப வரிசையில் தி.மு.க. தான் முதல் இடத்தில் உள்ளது. அந்தக் குடும்பத்தின் ஒரு அங்கமாகத்தான் ஆற்காடு வீராசாமி உள்ளார்.  அவர்களிடம் ரூ.100 கோடி மட்டுமல்ல, அதற்கும் அதிகமாகவே உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வர் குடும்பம் தி.மு.க. குடும்பம்.

ஆகையால், அவர்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம். அந்தளவுக்கு அவர்களிடம் பணம் உள்ளது. ஆனால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க முடியாது. அவர்கள் யாரும் விலை போக மாட்டார்கள் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து