முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ண ஜெயந்தி திருநாள்:பகவத் கீதை போதனையின் படி மக்கள் வாழ முதல்வர் வாழ்த்து

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

 சென்னை, இன்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பகவத் கீதை போதித்ததை மக்கள் மனத்தில் நிறுத்தி வாழ வேண்டும் என்று வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:-
பகவத் கீதை மூலம் மனித வாழ்க்கையின் நெறியினை உலகுக்கு உணர்த்திய பகவான் மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த திருநாளான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

வீட்டிற்கு வந்த...“அறம் பிறழ்கின்ற போது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்” என்ற கிருஷ்ணர்  பிறந்த இத்திருநாளில், மக்கள் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய், தயிர், பழங்கள், இனிப்புகள், பலகாரங்களை படைத்து, குழந்தைகளின் பிஞ்சு காலடிகளை வீட்டின் வழிநெடுக பதித்து, பகவான் கிருஷ்ணரே தங்கள் வீட்டிற்கு வந்தருளியதாக பாவித்து, கிருஷ்ண பகவானை போற்றி வணங்கி, ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

பகவத் கீதை... ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளில், பகவத் கீதை போதித்த கடமையின் சிறப்பையும், பயன் கருதாப் பணியின் உயர்வையும் மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, கடமை உணர்வுடனும், மகிழ்வுடனும் வாழ வேண்டுமென்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி  நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து