14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி - இந்திய அணி அறிவிப்பு - கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018      விளையாட்டு
indian team 2018 9 1

மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
14–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு மும்பையில் இன்று  நடைபெற்றது.
ரெய்னா நீக்கம்...
எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை தேர்வு செய்து அறிவித்தது. முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஆசியகோப்பை தொடரில் எதிர்பார்த்தது போலவே ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், சுரேஷ் ரெய்னா நீக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடுவுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்). ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ராயுடு, பாண்டே, கேதார் ஜாதவ், தோனி, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், அக்சர் படேல், ஷர்துல் தாக்குர், கலீல் அகமட், ஹர்திக் பாண்டியா, பும்ரா.

ஆசியப் போட்டி 2018 - அட்டவணை

1) 15 செப்டம்பர் - வங்கதேசம் vs இலங்கை (துபாய்).
2) 16 செப்டம்பர் - பாகிஸ்தான் vs தகுதி பெறும் அணி (துபாய்).
3) 17 செப்டம்பர் - இலங்கை vs ஆப்கானிஸ்தான் (அபி தாபி).
4) 18 செப்டம்பர் - இந்தியா vs தகுதி பெறும் அணி  (துபாய்).
5) 19 செப்டம்பர் - இந்தியா vs பாகிஸ்தான் (துபாய்).
7) 20 செப்டம்பர் - வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் (அபி தாபி).

சூப்பர் ஃபோர் சுற்று

1) 21 செப்டம்பர் - குரூப் ஏ முதல் இடம் vs குரூப் பி 2-ம் இடம் (துபாய்).
2) 21 செப்டம்பர் - குரூப் பி முதல் இடம் vs குரூப் ஏ 2-ம் இடம் (அபி தாபி).
3) 23 செப்டம்பர் - குரூப் ஏ முதல் இடம் vs குரூப் ஏ 2-ம் இடம் (துபாய்).
4) 23 செப்டம்பர் - குரூப் பி முதல் இடம் vs குரூப் பி 2-ம் இடம் (அபி தாபி).
5) 25 செப்டம்பர் - குரூப் ஏ முதல் இடம் vs குரூப் பி முதல் இடம் (துபாய்).
6) 26 செப்டம்பர் - குரூப் ஏ 2-ம் இடம் vs குரூப் பி 2-ம் இடம் (அபி தாபி).
செப்டம்பர் 28 - இறுதிச்சுற்று (துபாய்).

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து