ஆசிய விளையாட்டு போட்டி: குத்துச்சண்டையில் ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி இந்திய வீரர் அமித் தங்கம் வென்றார் - பிரிட்ஜ் போட்டியில் இந்திய ஜோடிக்கு தங்கம்

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018      விளையாட்டு
Amit Gold wins 2018 9 1

ஜகார்த்தா : ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனும், உஸ்பெகிஸ்தான் வீரருமான ஹசன்பாய் டஸ்மட்டோவை வீழ்த்தி இந்திய வீரர் அமித் பங்கல் தங்கப்பதக்கத்தை வென்றார். நேற்ற 13-வது நாளில் இந்திய அணி 2 தங்கப் பதக்கங்களை வென்றது.  பிரிட்ஜ் போட்டியில் இந்திய ஜோடிக்கு தங்கம் வென்றது.

67-வது பதக்கம்...

ஆசிய விளையாட்டில் குத்துச் சண்டைப் பிரிவில் தங்கம் வென்ற 8-வது வீரர் எனும் சிறப்பை அமித் பங்கல் பெற்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டில் இந்தியாவின் பதக்கம் 67-ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன் கடந்த 2010-ம் ஆண்டு சீனாவின் குவாங்ஜூ நகரில் நடந்த ஆசிய விளையாட்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 65 ஆக இருந்தது. அதற்கு அடுத்தாற்போல் இப்போதுதான் மிக அதிகமாக 67 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இன்னும் பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று இருப்பதால், போட்டியின் முடிவில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ வீரர்...

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆடவருக்கான 49 கிலோ எடைப்பிரிவுக்கான குத்துச்சண்டைப் போட்டியின் இறுதிச்சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரரும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஹசன்பாய் டஸ்மட்டோவை எதிர்கொண்டார் இந்திய வீரர் அமித் பங்கால். ராணுவ வீரரான அமித் பங்கால் ஆசிய விளையாட்டுப்போட்டியில் முதல்முறையாக அடியெடுத்து வைக்கிறார். தொடக்கத்திலிருந்தே சிறப்பாக பஞ்ச்களை கொடுத்த அமித் பங்கால், 3-2 என்ற கணக்கில் டஸ்மட்டோவை தோற்கடித்தார்.

பழிதீர்த்தார்...

கடந்த ஆண்டு நடந்த குத்துச்சண்டை உலக சாம்பியன் போட்டியில் டஸ்மட்டோவ் வெள்ளி வென்றவர், ஒலிம்பிக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர், இவரை இந்திய வீரர் அமித் பங்கால் வீழ்த்தியது மிகச்சிறப்பானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன் ஹம்பர்கில் நடந்த போட்டியின்போது, உஸ்பெகிஸ்தான் வீரர் டஸ்மட்டோவும், அமித் பங்காலும் மோதியுள்ளனர். அப்போது, அமித்தை வீழ்த்தியுள்ளார் டஸ்மட்டோவ். அதற்கு இந்தப் போட்டியில் டஸ்மட்டோவை பழிதீர்த்துவிட்டார் இந்திய வீரர் அமித்.

பிரிட்ஜ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

இந்தோனேஷியாவில் நடந்து வரும் 18–வது ஆசிய விளையாட்டு போட்டியின் பிரிட்ஜ் போட்டி எனப்படும் சீட்டு விளையாட்டில் இந்தியாவின் பிரணாப் பர்தான் (வயது 60) மற்றும் ஷிப்நாத் சர்கார் (வயது 56) ஆகியோர் இறுதி போட்டியில் 384 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தினை பிடித்தனர்.  அவர்களுக்கு தங்க பதக்கம் கிடைத்தது.

சீன இணையான லிக்சின் யாங் மற்றும் காங் சென் ஆகியோர் 378 புள்ளிகளுடன் 2வது இடத்தினை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றனர்.  இந்தோனேசியாவின் ஹெங்கி லசூட் மற்றும் பிரெட்டி எட்டி மனோப்போ இணை 374 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளனர். இதேபோன்று மற்றொரு இந்திய இணையான சுமித் முகர்ஜி மற்றும் தேபப்ராடா மஜும்தர் 333 புள்ளிகள் எடுத்து 9வது இடம் பிடித்தனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து