முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனைவியுடன் அமெரிக்கா சென்றார் கேரள முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,கேரள முதல்வர் பினராய் விஜயன், தனது மனைவியுடன் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.  பினராய் விஜயன், அமெரிக்காவின் மேயோ கிளினிக் மருத்துவமனையில் சிகிச்சை பெறவுள்ளதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, பினராய் விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த மாதம் 19-ம் தேதி அமெரிக்கா சென்று, இந்த மாத மத்தியில் நாடு திரும்புவது என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தென்மேற்குப் பருவமழை கொட்டித் தீர்த்த காரணத்தால் தனது அமெரிக்க பயணத்தை விஜயன் ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில், இன்று அமெரிக்காவுக்கு அவர் புறப்பட்டு செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்னதாகவே நேற்று பினராயி விஜயன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மனைவியும் உடன் சென்றுள்ளார். அமெரிக்காவில் 3 வாரங்கள் தங்கியிருந்து முதல்வர் சிகிச்சை பெறுகிறார் என கூறப்படுகிறது. பினராயி விஜயன் திரும்பி வரும்வரை அவரது இலாகா பொறுப்புகளை தொழிற்சாலைகள் துறை மந்திரி இ.பி. ஜெயராஜன் கவனித்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் சென்னை வந்திருந்த அவர், அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து