குரங்கு தொல்லைகளை சமாளிக்க உ.பி. முதல்வர் கூறும் புது ஐடியா

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2018      இந்தியா
yogi 02-09-2018

புது டெல்லி, உ.பி.யில் குரங்குகள் தரும் தொல்லைகளைச் சமாளிக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு புதிய யோசனை தெரிவித்துள்ளார். ஹனுமரை வணங்கி அவர் மந்திரத்தை ஓதும்படி அதில் கூறியுள்ளார்.

உ.பி.யின் முதல்வராக இருக்கும் யோகி அதித்யநாத் மதுராவின் பிருந்தாவன் சென்றிருந்தார். அங்கு உ.பி. சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். அப்போது மதுராவாசிகள் அங்கு குரங்குகள் தொல்லை அதிகரித்து வருவதாகப் புகார் தெரிவித்தனர். இதைக் கேட்ட யோகி அவர்களிடம் ஒரு புதிய யோசனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் யோகி கூறும் போது, பஜ்ரங்பலியை (ஹனுமர்) அன்றாடம் வணங்கி அவர் மீதான மந்திரத்தை ஓதுங்கள். குரங்குகள் உங்களுக்கு என்றுமே தொல்லை தராது எனத் தெரிவித்தார்.தனக்கும் குரங்குகளுடன் ஏற்பட்ட ஒரு அனுபவத்தையும் யோகி பகிர்ந்து கொண்டார். அதில் அவர், தாம் மடாதிபதியாக இருக்கும் கோரக்நாத் கோயிலிலும் குரங்குகள் வருவதாகவும், அவை தனது மடியில் அமர்ந்து தாம் கொடுப்பதை உண்டு மகிழ்ந்து சென்று விடுவதாகவும் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து