ஓராண்டு அனுபவங்கள் குறித்து வெங்கையா எழுதிய நூலை பிரதமர் மோடி வெளியிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2018      இந்தியா
modi Venkiah 02-09-2018

புது டெல்லி, துணை ஜனாதிபதியாக தனது ஓராண்டு அனுபவங்கள் குறித்து வெங்கய்ய நாயுடு எழுதியுள்ள நூலை பிரதமர் மோடி வெளியிட்டார.பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு. இவர் துணை ஜனாதிபதியாக கடந்த 2017-ம் ஆண்டு, ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று பதவியேற்றார். அத்துடன் மாநிலங்களவை சபாநாயகராகவும் பதவியேற்றிருந்தார்.

அவர் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஓராண்டில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.  245 பக்கங்களைக் கொண்டுள்ள இந்த புத்தகத்தில், புதிய இந்தியா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், வெங்கையா நாயுடுவின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் முக்கிய விவகாரங்களில் அவரது பங்களிப்பு இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெங்கையா நாயுடு எழுதியுள்ள நூலை டெல்லியில் பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன் சிங், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ஆனந்த் குமார் மற்றும் ராஜ்ய சபா எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து