நாகாலாந்து வெள்ள பாதிப்புகள் குறித்து மாநில முதல்வருடன் பிரதமர் ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2018      இந்தியா
Nagaland CM meets PM  02-09-2018

கொஹிமா, நாகாலாந்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

நாகாலாந்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. எனவே போதிய போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இந்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 12 பேர் உயிரிழந்தனர். மேலும் ரூ. 800 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நெய்ப்யூ ரியோ தெரிவித்தார். மேலும் முதல்கட்ட நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், நாகாலாந்து முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அங்கு ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். அம்மாநில மக்களுக்காக கடவுளிடம் பிரார்த்திப்பதாகவும், அவர்களுடன் துணை நிற்பதாகவும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து