அமீரகத்தின் நிதியுதவி கிடைக்கும் கேரள முதல்வர் பினராய் நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2018      இந்தியா
Pinarayi Vijayan 2017 9 9

திருவனந்தபுரம்,கேரள வெள்ள நிவாரணத்துக்காக ஐக்கிய அரபு அமீரகம் வழங்குவதாக கூறிய ரூ.700 கோடி விரைவில் கிடைக்கப் பெறும் என அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான பாராட்டு விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பினராயி விஜயன் கூறியதாவது:-கேரளாவின் வெள்ள நிவாரணத்துக்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நிதியுதவிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அதேபோல், வெளிநாடுகளில் இருந்தும் நிதியுதவிக்கான அறிவிப்புகள் வருகின்றன. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடியை வழங்க முன்வந்துள்ளது. ஆனால், அந்த நிதியுதவியைப் பெற மத்திய அரசு மறுத்து வருகிறது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் என நம்புகிறேன். எனவே, ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியுதவி கேரளாவுக்கு விரைவில் கிடைக்கும் என பினராய் விஜயன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து