ஆசிய விளையாட்டு போட்டிகள் நிறைவு அணிவகுப்பை வழிநடத்துகிறார் ராணி ராம்பால்

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2018      விளையாட்டு
Rani Rampal 2018 9 2

ஜகார்தா : 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதன் நிறைவு நிகழ்ச்சியில், இந்தியக் குழுவை மகளிர் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால் தேசிய கொடியேந்தி வழிநடத்திச் செல்கிறார்.  இந்த அறிவிப்பை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா வெளியிட்டுள்ளார்.

ராணி ராம்பால் தலைமையிலான மகளிர் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் தேசிய கொடியேந்தி இந்திய அணியை வழிநடத்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து