வங்கிகளில் ரூ. 270 கோடி கடன் பெற்று வெளிநாடு தப்ப முயன்றவர் டெல்லியில் கைது

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2018      இந்தியா
Rush Dental Singh 02-09-2018

புது டில்லி,வங்கிகளில் ரூ.270 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்ப முயன்ற சொகுசு கார் நிறுவனங்களின் டீலர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து நாட்டவரான ரஷ் பல் சிங்,ஜெனிகா குழுமத்தின் தலைவராக உள்ளார். ஜெனிகா நிறுவனம் டெல்லி, குர்கிராம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆடி மற்றும் போர்சி சொகுசு கார் நிறுவனங்களின் முக்கிய டீலராக இருந்து வருகிறது. ரஷ் பல் சிங், இந்த ஆண்டு மார்ச் மாதம் புதிய கார்கள், மாதிரி கார்கள், பயன்படுத்தப்பட்ட கார்கள், உதிரி பாகங்கள் வாங்குவதற்காக எச்.டி.எப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கனரா வங்கி, காஷ்மீர் வங்கி, வோல்ஸ்வேகன் பைனான்ஸ் ஆகியவற்றில் ரூ.270 கோடி வரை கடன் பெற்றுள்ளார்.

இவற்றில் எச்.டி.எப்.சி வங்கியில் மட்டும் ரூ.120 கோடி கடன் பெற்றுள்ளார்.கடனை திருப்பி செலுத்தாமலும், தவணை தொகை செலுத்தாமலும் இருந்து வந்த ரஷ் பல் சிங் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி டெல்லி போலீசின் நிதி சார்ந்த குற்றப்பிரிவிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் கடந்த 31-ம் தேதி காலை வெளிநாடு தப்பிச் செல்வதற்காக டெல்லி விமான நிலையத்தில் காத்திருந்த ரஷ் பல் சிங்கை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவருக்கு துணையாக இருந்த மன்திர் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து