விவசாயிகள் விளைவித்த நெல்லை அரசே கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் - முதல்வர் எடப்பாடி உத்தரவு: தமிழக அரசு தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2018      தமிழகம்
CM Edapadi1 2017 9 3

சென்னை : விவசாயிகள் விளைவித்த நெல்லை அரசே கொள்முதல் செய்வதற்கு ஏற்ற வகையில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அமைச்சர் காமராஜூம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் உறுதிப்படுத்தினார். 

நாகப்பட்டினத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதாகவும், அவை மத்திய அரசின் மானியம் வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் மூட்டப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார். இதற்கு விளக்கமளிக்கும் வகையில் தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று விவசாயிகள் விளைவித்த நெல்லை அரசே கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தங்கு தடையில்லாமல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது என உணவுத்துறை அமைச்சர் .ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து