சென்னை அருகே குன்றத்தூரில் பெற்ற குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்று தப்பியோடிய தாய் கைது

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2018      தமிழகம்
mother arrest 2018 9 2

சென்னை : சென்னை  அருகே குன்றத்தூரில் பாலில் விஷம் கலந்து கொடுத்து இரு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவான கொடூர தாய் நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் விஜய் (30). இவர் சென்னையில் உள்ள பிரபலமான தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இதற்காக விஜய், தனது குடும்பத்துடன் குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை அகத்தீஸ்வரம் கோயில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். விஜய்க்கு அபிராமி என்ற மனைவியும், அஜய் (7) என்ற மகனும், காருனிகா (4) என்ற மகளும் இருந்தனர். அஜய், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில், வங்கியில் வேலைப்பளு காரணத்தால், கடந்த வெள்ளிக்கிழமை இரவு விஜய் வங்கியிலேயே தங்கி விட்டார். சனிக்கிழமை அதிகாலை அவர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனே வீட்டுக்குள் சென்ற விஜய், படுக்கை அறையில் குழந்தைகள் அஜய்யும், காருனிகாவும் வாயில் நுரைத் தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர், தனது மனைவி அபிராமியை தேடினார். ஆனால் அங்கு அபிராமி இல்லாதது அவருக்கு மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, தனது குழந்தைகள் இறந்து கிடப்பதைப் பார்த்து விஜய் கதறி அழுத சத்தம் கேட்டு, அந்தப் பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.

உடனே அவர்கள், குன்றத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த குன்றத்தூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இரு குழந்தைகளின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், இரு குழந்தைகளும் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் கணவர் - மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்ததும், கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததும், மேலும் அபிராமி அதேப் பகுதியைச் சேர்ந்த ஒரு நபருடன் நெருக்கமாக இருந்ததும் போலீஸாருக்கு விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனால், அபிராமியே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, அந்த நபருடன் தப்பியோடியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தலைமறைவாக இருந்த அபிராமியை போலீஸார் தீவிரமாக தேடினர். தப்பியோடிய அபிராமியை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவரது ஸ்கூட்டி கோயம்பேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அவர் வெளியூருக்கு தப்பி சென்றது தெரியவந்தது. இந்நிலையில் அபிராமியின் கள்ளக் காதலனான சுந்தரம் போலீசில் சிக்கினார். (கள்ளக்காதலன் சுந்தரத்திற்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது குறிப்பிடத்தக்கது) சுந்தரத்தை உடன் வைத்துக் கொண்டே போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர். அபிராமியிடம் சுந்தரத்தை போனில் பேச வைத்தனர். இதையடுத்து அபிராமி நாகர்கோவிலில் இருப்பது தெரியவந்தது.

குழந்தைகளின் கொலைச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த தாய் அபிராமி, நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில்,

மூன்றாம் கட்டளையில் உள்ள பிரியாணி கடைக்கு குழந்தைகளுடன் சென்று ஒரு நாள் பிரியாணி சாப்பிட்டேன். அப்போது எனக்கும் அங்கு பில் போடும் பணியில் இருந்த சுந்தரத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் அடிக்கடி அந்த கடைக்கு பிரியாணி வாங்க செல்வேன். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 மாதங்களாக நீடித்த எங்கள் கள்ளக்காதலை என்னால் விட முடியவில்லை. அதனால் கணவன், குழந்தைகளை கொல்ல திட்டம் தீட்டினேன் என்று கூறியுள்ளார் அபிராமி. பெற்ற குழந்தைகளை ஈவு, இரக்கமின்றி கொன்ற அபிராமி பற்றிய செய்தி குன்றத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து