கட்சியையும், என்னையும் களங்கப்படுத்த முயற்சி ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக சந்திப்பேன் - அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2018      தமிழகம்
vijayabaskar 2017 1 29

சென்னை : தி.மு.க .தலைவர் ஸ்டாலின் எழுப்பிய குற்றச்சாட்டுக்களை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பி வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைபேசி வாயிலாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

தி.மு.க.தலைவர்மு.க.ஸ்டாலின், என்னையும், ஆளுங் கட்சியையும் களங்கப்படுத்துவதற்காக அவரால் முடிந்த எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறார். என் வீட்டிலோ என் தந்தையின் வீட்டிலோ அல்லது என்னைச் சார்ந்த எவரது வீட்டிலோ கணக்கில் வராத பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. சில துண்டு காகிதங்களை வைத்துக் கொண்டுஅவதூறு பரப்புகிறார்கள். இந்த துண்டு காகிதங்களை வருமான வரித்துறை யின் அறிக்கை என்றும் கூறிக்கொள்கிறார்கள். அந்த துண்டு காகிதங்களில் என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த பிரச்சனைகளை சட்டரீதியாக எதிர்கொள்வேன். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து