கணவருக்கு போட்டியாக களம் இறங்கும் சமந்தா

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      சினிமா
Samantha--With-Husband

நாக சைதன்யாவை திருமணம் செய்துக் கொண்ட சமந்தா, தற்போது அவருக்கு போட்டியாக களமிறங்க இருக்கிறார்.

சமந்தா - நாக சைதன்யா திருமணம் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்றது. அதன் பின் இப்போது வரை சமந்தா நடிப்பில் ஐந்து படங்கள் வெளியாகியுள்ளன. தமிழில் மெர்சல், இரும்புத்திரை ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்துள்ளன. இவை அனைத்தும் வெற்றிப்படங்களாகவும் அமைந்தன. சமந்தா பிரதான வேடம் ஏற்று நடித்துள்ள யூ டர்ன் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் அதே நாளில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள சீமராஜா படமும் வெளியாகிறது.

இந்நிலையில் அதே நாளில் நாகசைதன்யா நடித்துள்ள ‘சைலஜா ரெட்டி அல்லுடு’ படமும் வெளியாக உள்ளது. திருமணத்திற்குப் பின் அவர் கதாநாயகனாக நடித்து வெளியாகும் முதல் படம் இதுவாகும். மகாநடி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதுதவிர சமந்தா நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் படம் தயாராகி வருகிறது. முன்னதாக சமந்தா தனது கணவரின் படத்துக்காக தனது பட ரிலீசை தள்ளிவைப்பார் என்று செய்தி வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து