முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரலாற்று சிறப்பு மிக்க பிரேசில் அருங்காட்சியகத்தில் தீ விபத்து

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

பிரேசிலியா, பிரேசிலின் 200 ஆண்டு பழமையான அருங்காட்சியகத்தில் தீப்பிடித்ததில் வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்கள் எரிந்து சாம்பலாகியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஊடகங்கள் தரப்பில், பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டெ ஜெனிரோவில் 200 ஆண்டு பழமை வாய்ந்த அருங்காட்சியகத்தில் திடீரென தீப்பிடித்தது. இதில் 20 மீட்டர் தூரம் வரை இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்கள் தீக்கு இரையாகின என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து இந்த அருங்காட்சியகத்தின் துணை இயக்குநர் கூறும் போது, இது ஒரு தாங்க முடியாத பேரிழப்பு. லத்தீன் அமெரிக்காவில் அமைந்துள்ள மிகப் பெரிய அருங்காட்சியகம் இதுவாகும். நாங்கள் பல மதிப்பிட முடியாத பொருட்களைச் சேகரித்து வைத்திருத்தோம். அவை அனைத்தும் நூறு வருடங்கள் பழமை வாய்ந்தது என்றார்.

தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து